Wednesday, November 9, 2011

கமராவில் மாயம் செய்யலாம்!!!!

எல்லோரும் போய்ஸ் படம் பார்த்திருப்பீங்க. சங்கர் இயக்கத்தில் வெளிவந்து பிரச்சினையை ஏற்படுத்திய படம். என்ன தான் என்றாலும் அதில் வந்த  அல அலே என்ற சித்தார்த், ஜெனிலியா நடித்த பாட்டில் சித்தார்த் பாய்ந்து அந்தரத்தில் நிற்கும் போது கமரா அரை வட்டமளவிற்கு சுற்றி வந்து நிற்க அதன் பின் சித்தார்த் அந்தரத்திலிருந்து கீழ் இறங்குவது போன்ற காட்டிகள் பல இருக்கும். 
பலர் அது சித்தார்த் அந்தரத்தில் நிற்கும் போது கமரா அரைவட்டம் அடிக்கும் அதன் பின் கீழிறங்குவதாக நினைப்பார்கள். ஆனால் அது பொய். 

சித்தார்த்தை சுற்றி கமராக்கள் காணப்படும். அவற்றில் 2 முனைகளிலும் வீடியோ கமராவும் இiயே சாதாரண டிஜிட்டல் கமராவும் காணப்படும். வீடியோ கமராக்கள் கிட்டத்தட்ட 160 பாகைக்குள் காணப்பட வேண்டும். இல்லாவிட்டால் எதிர்முனையில் காணப்படும் கமரா மற்றைய கமராவில் காணப்படும். அதனை கவனித்து வைத்தால் நன்று.
வீடியோ கமரா தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்க சித்தார்த் மேலே சென்றதும் ஒரே நேரத்தில் டிஜிற்றல் கமராக்கள் படத்தை எடுக்கவேண்டும். அனைத்து படங்களும் அடுத்தடுத்த பாகைகளில் காணப்படுவதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆங்கிள்களில் காணப்படும்.
அதை எடிற்றிங்கில் வீடியோ போக சித்தார்த் மேலே சென்றதும் பாகை ஒழுங்கில் கமராவில் பெறப்பட்ட புகைப்படங்களை மிக வேகமாக ( செக்கனுக்கு 15 படங்கள் வீதம்) செற் செய்து இறுதியில் மற்றைய வீடியோ கமராவில் பெறப்பட்ட வீடியோவை விட்டால் வேலை முடிந்தது.



 என்றும் நன்றியுடன்.

No comments:

Post a Comment