Wednesday, November 9, 2011

சிங்களத்தால் தமிழ் மாணவனுக்கு வந்த...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் மாணவன் ஒருவன் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு படிக்க சென்றிருந்தான். தென்னிலங்கையில் படிப்பு என்பதால் அம் மாணவன் ஓரளவு சிங்களம் படித்தான். பல்கலைக்கழகத்தில் சீனியேர்ஸ்; ராகிங்கிற்காக மாணவனிடம் ஒரு பாண் வாங்கி வரும்படி கூறியுள்ளனர். மாணவனும் கடைக்கு (சிங்களவரின் கடை) சென்று பாண் பெட்டியில் கையை காட்டி This எக தென்ன என்று கேட்டான். கடைக்காரனும் திஸ் ஏக...!!! என்று கேட்க யெஸ் யெஸ் This ஏக என்று மாணவன் கூறினான். மாணவனை கடைக்காரன் மரியாதையாக உள்ளே இருத்திவிட்டு போன் செய்து கதைத்தான். சிறிது நேரத்தில் கடை வாசலில் ஒரு வான் வந்து நின்றது. கடைக்காரன் சென்று 2 பெரிய பைகளையும் 1 சிறிய பையையும் கொண்டுவந்து மாணவனிடம் (அதில் ஒவ்வொரு பெரிய பைகளிலும் 15, 15 பாண் படியும் சிறிய பையில் 1 பாணையும் வைத்து கொடுத்தான்) கொடுத்து விட்டு 930 ரூபாய் தர சொன்னான். மாணவன் திகைத்து போனான். எதிர்த்து கதைக்க சிங்களமும் அரைகுறையா தான் தெரியும். வேற வழி... 930 ரூபாயும் குடுத்திற்று வந்தான். அண்டைக்கு பல்கலைக்கழக விடுதியில் உள்ள மாணவர்களுக்கு இந்த மாணவன் பாண் தானம் செய்தான்.

நடந்தது என்ன??
மாணவன் This ஏக தென்ன என்று கேட்டான். மாணவனின் அர்த்தப்படி 
This என்றால் 'இது'
சிங்களத்தில் ஏக என்றால் 'ஒன்று'
சிங்களத்தில் தென்ன என்றால் 'தா'
அதாவது பாணை காட்டி 'இது ஒன்று தா'

கடைக்காரன் மாணவன் திஸ்எக தென்ன என கேட்கிறான் என கொண்டு, கடைக்காரன் அர்த்தப்படி
திஸ்எக என்றால் '31'
தென்ன என்றால் 'தா'
அதாவது பாணை காட்டி 31 தா என கேட்கிறான் என கொண்டு தன்னிடம் அவ்வளவு பாண் இல்லாததால் பக்கத்திலுள்ள பேக்கரிக்கு போன் செய்து 31 பாண் தருமாறு சொல்லியுள்ளான்.

தத்துவம்- ஒரு மொழியின் அடிப்படையை தெரிந்து கொள்ளாமல் பேசப்படாது. பேசினா இப்பிடி தான்.


வந்தது வந்திற்றீங்க கருத்துரையை இட்டு செல்லவும்.

என்றென்றும் நன்றியுடன்.


No comments:

Post a Comment