Wednesday, November 2, 2011

வேலாயுதம்-திரைவிமர்சனம்.

படம் வந்து 1 கிழமைக்கு பிறகு தான் படம் பாக்கிறதுக்கே வாய்ப்பு கிடைச்சிருக்கு. அவ்வளவு சனம் அள்ளுது.
தொடர்ந்து பல தோல்விகளுக்கு பின் மீண்டும் விஜயின் மார்க்கெட் எழ தொடங்கியுள்ளது.
பாக்கிஸ்தானில் தமிழகத்தில் குண்டுவெடிப்பு செய்ய திட்டமிடும் தீவிரவாதிகளுடன் தமிழக அரசியல்வாதிக்கு தொடர்புள்ளது. பெண்களை வைத்து தொழில் செய்யும் கும்பல் பற்றிய தகவல் அறிந்த பத்திரிக்கையாளர் ஜெனிலியாவின் நண்பர்கள் அவர்களால் கொல்லப்படுகின்றனர். அதேநேரம் அவர்களை கொலை செய்தவர்களும் விபத்தில் சாகின்றனர். அதை பார்த்த ஜெனிலியா அவர்களை கொன்றது வேலாயுதம் என எழுதுவிட்டு செல்கிறார்.
கிராமத்தில் விஜயும் சரண்யாவும் சென்னை செல்ல ரயிலை மறித்து ஊரே வழியனுப்பி வைக்கிறது. ரயிலில் விஜய்யும் சரண்யாவும் செய்த அட்டுழியங்களை கேட்டு கேட்டு நம் காது புண்ணாகின்றது.

சென்னைக்கு பாங்கிலுள்ள பணத்தை எடுக்க வரும் விஜய் வங்கியால் ஏமாற்றப்படுகிறார். அதற்கு முன் விஜயின் பெயர் வேலாயுதம் என்றும் அவர் தெரியாத்தனமாக 2 குண்டுவெடிப்பிலிருந்து மக்களை காப்பாற்றுவதும் ஜெனிலியாக்கு தெரிந்து விஜயிடம் வேலாயுதமாக மாறும் படி கேட்கிறார். ஆனால் விஜய் மறுக்கிறார். பாங்கால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜய் (நாலு பேர் வேலாயுதம் வந்து தம் பணத்தை மீள தருவார் என்று உசுப்பேற்றுகின்றார்கள்) வேலாயுதமாக பொங்கியெழுந்து பணத்தை மீட்டு கொடுக்கிறார். ஆதோடு விடாமல் ஜெனிலியா பெண்கள் விவகாரத்தையும்  விஜயிடம் ஓத மீண்டும் சீறியெழுகிறார். அடிக்கிறார் துவைக்கிறார்.

எல்லாத்தையும் முடித்து சரண்யாவின் கல்யாணத்தை நடத்தும் வேளையில் அவர்கள் வீட்டிலேயே குண்டு வைத்துகொல்ல சதி செய்கின்றனர். அதில் சரண்யா மட்டும் சாகிறார். மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கும் போது மந்திரி வேலாயுதம் என்று பாக்கிஸ்தான் தீவிரவாதியையே மக்கள் முன் அறிமுகப்படுத்துகிறார். உண்மையான வேலாயுதத்தை காட்டும் நோக்கத்துடன் சென்னை வரும் விஜய் ஸ்ரேடியத்தில் நடக்கும் சண்டையில் விஜயின் சிக்ஸ்பாக் தெரிகிறது...!!!!!!!

பெரியளவு பஞ்ச் வசனமின்றி தலைமயிருக்கு கலர் இன்றி உண்மையான விஜய்யை பார்க்க முடிகின்றது.  தமிழக அரசியல் மாற்றம் படத்தில் தெரிகிறது... ஓரளவு அரசியல் வாடையுடன் கலக்கி வருகின்றது.... வேலாயுதம்.

No comments:

Post a Comment