Tuesday, November 8, 2011

சூழலை பாதுகாக்க எம் முயற்சி

யா.மகாஜனக்கல்லூரியில் நான் படிக்கும் காலத்தில் இலங்கையின் சிறந்த வனமாகிய சிங்கராஜவனத்திற்கு கல்விச்சுற்றுலாவாக சென்று 3 நாட்கள் காட்டிற்குள்ளேயே தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு பெறப்பட்ட புகைப்படங்களை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். 
அங்கு சென்ற பின் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக சூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் கையேடு வெளியிட்டேன். இதற்கு பாடசாலையின் புவியியல் கழகமும் Society of Observing the Nature ம் ஆதரவு வழங்கின. என் பாடசாலை காலத்தில் 2 கையேடுகள் வெளியிடப்பட்டன. அவை உங்கள் பார்வைக்கு...

எமது நோக்கம்- 
இலங்கையின் நிகழ்கால, எதிர்கால சந்ததியினரின் தேவைகளையும் விருப்பங்களையும் ஈடேற்றும் சுத்தமான சூழலை உருவாக்கல்.

எமது பணிக்கூற்று- 
விஞ்ஞான,தொழில்நுட்ப ரீதியில் பூரணஅறிவு கொண்ட, இயற்கையுடன் ஒத்துழைத்து அர்ப்பணிப்பும் பணிவும் கொண்ட மாணவ சமுதாயத்தை உருவாக்கி இலங்கையின் சூழல் தரத்தை முன்னேற்றுதல்.

பகிர்வு 1
இப்பகிர்வு சூழல் மாசடைவை ஏற்படுத்தும் காரணிகள் பற்றிய பகிர்வாக காணப்படுகின்றது. நீர், நில, வளி மாசடைவு பற்றிய விளக்கங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது. மேலும் மாணவர் ஆக்கங்களாக 2011 கலைப்பிரிவு மாணவியின் கவிதையையும் 2011 கலைப்பிரிவு மாணவன் அஜித்தின் சித்திரத்தையும் கொண்டு அமைந்துள்ளது.







Full View 1

Full View 2

No comments:

Post a Comment