Friday, March 18, 2011

எது அழகு???

ங்கெணும் காணும் இயற்கை
ழில் கொஞ்சும் கானகமுடனே- நற்கருத்தை
டுத்தியம்பிடும் நற்பாக்களும் அழகா? அன்றில்
ம் செல்வம் காட்டா எளிமையே அழகு.

துக்கத்தில் மகிழ்வு கொள் மனமும் - பிறர்
துயரத்தில் பங்கு கொள் பண்பும் கொண்டு- மற்றோர்
துயர் துடை பாங்கினொடு
துணிவெனும் ஆயுதம் கொள்வதே அழகு.

ம்பு போன்ற விழியும் - அங்கே
ழகெழில் கொஞ்சும் கூந்தலும்
னல் போன்ற கோபமும் - சற்றே
ன்பு கொள் பார்வையும் அழகு.

மென்மலர் போன்ற கனிவும்
னத்தே மலையை எதிர்கொள் துணிவும்
முதியோரை மதிக்கும் பணிவும்
ற்றோர் மனம் கோணாப் பண்பும் அழகு.

குணத்திலே குற்றமற்றவராய் - மற்றோர்
குற்றம் களைய முனைபவராய்
குன்றாத அன்பும் பிறர் மனம் கோணாமல்
குபேரனாயும் குறவனாயும் நடத்தலே அழகு.

Friday, March 4, 2011

களப்பயணம் 2

எமது பாடசாலையின் இயற்கை அவதானிப்பு கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட பறவைகளை 
அவதானிப்பதற்கான களப்பயணம் 2.

மண்டைதீவு (Mandaitivu) , அல்லைப்பிட்டி (Allaippiddi)