Monday, May 17, 2010

எருமையில எமன் இல்ல உங்கட போனில தான்..

நேற்று பிளாக்கில ஒரு போஸ்ட் போட்டனான்.இப்ப 2 நாளா போன் வெடிக்கிறத எதிர்த்து.ஆனா இப்ப என்ர முடிவ மாத்தீட்டன் ஏனிண்டா எனக்கும் போன் கோல் வந்தது. அத பாத்ததில இருந்து என்ர போன் ஓஃவ்ல இருக்கு. நான் தப்பீட்டன். ஆனா பக்கத்து வீட்டுக்காரன் பாவம் மாட்டுப்பட்டிட்டான். காதுக்குள்ள இருந்து ரத்தம் வடிய ஆஸ்பத்திரியில கிடக்கிறான். எப்பிடித்தான் இப்பிடிப்பட்ட வழிய கண்டு பிடிச்சு செய்யுறானுகளோ தெரியல?.அத செய்தவன் என்ர கையில கிடச்சான் துலைஞ்சான்..
எனக்கு முதல் முதல்ல என்ர பிரெண்ட் அனுப்பின செய்தி இதுதான்..

(அந்த செய்தி..

very important news for all of you. Do not pick up calls Under given numbers.
   
9888308001
    91+9316048121
    9876266211
    9888854137
    9876715587
These numbers will come in red color, if the calls comes up from these numbers. Its with very high wave length, and frequency. If a call is received on mobile from these numbers, it creates a very high frequency and it causes brain ham range.

It's not a joke rather, its TRUE. 27 persons died just on receiving calls from these numbers. Watch Aaj Tak (NEWS), DD News and IBN 7.

----------------------------------------------------------------------------------------
இந்த செய்தியானது 2 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் பரப்பப்பட்டதாக எமது இந்திய நண்பர்கள் தெரிவித்தனர்..
இச்செய்தியில் சில தவறுகள் (ஜோக்காக ஆனால் சிந்திக்க).
1."These numbers will come in red color"..அண்ணோய் என்ர Black and White போன் எப்பிடி சிவப்பில நம்பர் வரும்?

2."very high wave length, and frequency".. ஒரு சாதாரண் போனில் 900-1800 ஆகவே frequency உள்ளது.. மனிதனின் காது கேக்க கூடியது அதிகூட 20000Hz ..
--அப்ப எப்புடி கூட frequency வரும்..

3."Watch Aaj Tak (NEWS), DD News and IBN 7." இதில் எந்த செய்தி சேவையிலும் இப்படி செய்தி வரவில்லை.. வந்தால் தானே நம்ப முடியும்..

இப்பிடி நினைச்சுக்கிட்டிருந்தன்.ஆனாலும் என்ர பிரெண்டின்ர Black and White போனுக்கும் சிவப்பு கலரில போல் வந்தது.நம்மளுக்கு ரிஸ்க் எடுக்கிறது றஸ்க்கு சாப்பிடுற மாதிரினு நினைச்சு கோலை அட்டன்ட் பண்ணி சொந்த செலவில சூனியம் வைக்கவேண்டாம்.
"BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,BE CAREFUL,"

Sunday, May 9, 2010

ராவணனுடன் ரஹ்மான்..

உசிரே போகுதே : "இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே" என்று மெதுவாக கார்த்திக்கின் குரலில் ஆரம்பிக்கும் பாடல் அக்மார்க் பிளாக் தீம் வகையை சார்ந்தது. "உசிரே போகுதே உசிரே போகுதே. உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே" என்று கார்த்திக் உருகிப்பாடுவது நம்மையும் உருக வைக்கிறது.
சிறந்த பாடல்.ஆனால் பின்னணி இசை மீண்டும் மீண்டும் ஒலிப்பது சரியில்லை.ரஹ்கிற்கு வேற வழியில்ல.சரி அதை பொறுக்கலாம். ஏனெனில் வைரமுத்து இருக்கக்க என்ன பிரச்சினை?? பாடல் வரிகள் பிரமாதம்.
குரலில் கசியும் ஏக்கத்தை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறார் ரஹ்மான். சரணங்களின் முடிவில் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் ஹாம்மர் இசை அடுத்த நொடியே அடங்கிப்போவது அட்டகாசம். "அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி" என்ற வரிகளில் வைரமுத்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.
ட்ரம்ஸ்ஸின் அதிர்வுகள் ஏற்படுத்தும் உணர்வுகளை அனுபவித்தால் மட்டுமே புரியும். அலட்டிக்கொள்ளாமல் ஏதோ ஒரு பய உணர்வை ஏற்படுத்தும் வித்தையை ரஹ்மான் இந்த பாடலில் புரிந்திருக்கிறார்.இடையிடையே மணியடிக்கிறது.ஏனின்டு புரியல.படம் பாத்தாத்தான் தெரியும்..
http://www.mediafire.com/?00heo4yjjjo

வீரா வீரா : அதிவேக எக்ஸ்பிரஸ் ஒன்றின் வேகத்தை வாத்தியக்கருகளின் மூலம் ஓடவிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். “வீரா வீராஇ தீரா தீரா” என்று விஜய் பிரகாஷின் குரல் உச்சஸ்தாயில் எகிறி எகிறி அடிக்கிறது.
"ராமந்தேன் ராவணந்தேன்" என்று கிராமத்து ஸ்டைலில் குரல் ஒலிக்கஇ பின்னணியில் மேற்கத்திய வாத்தியக்கருவிகள் சுருதி சேர்ப்பது ரசனை. பேன் பைப்ஸ்'ன் இசையை அதிரடியாய் பயன்படுத்தி இருக்கிறார் ரஹ்மான். தீம் சாங்காக இருக்கலாம்.
யாருக்குமே கேட்காதவாறு ஒளிந்து கொண்டு குரல் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். இந்த அதிரடி இசை கீர்த்திசாகத்தியா’வின் குரலுக்கு பெரிதாய் வேலைகொடுக்கவில்லை.
http://www.mediafire.com/?z2onnt2wn3b

கோடு போட்டா : இதோ பென்னிக்கு இன்னொரு அதிரடி ஹிட் கிடைத்துவிட்டது. ஹோம் தியேட்டரை அதிர வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ரஹ்மான் விளையாடி இருக்கிறார். தடக் தடக் என்ற ஆர்ப்பாட்டமான தாளக்கட்டில் தாவிகுதித்து விளையாடும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
"சல்லிக்கட்டில் மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா" என்ற வரிகளில் வைரமுத்துவின் பேனா கூர்வாளாய் மாறி இருக்கிறது. இன்னும் கொஞ்சம்இ இன்னும் கொஞ்சம் என்று பீட்ஸின் ரேஞ்ச்இ ஹை பிட்சை தொட்டிருக்கிறது. பேஞ்ஜோ கருவியின் வேகத்திற்கு ரஹ்மான் சரி வேலை கொடுத்திருக்கிறார். பாடலின் ஆக்ரோஷத்தை விக்ரமின் கண்ணில் பார்க்க ஆவலாக இருக்கிறது.
http://www.mediafire.com/?eojjmejymyv

காட்டு சிறுக்கி : "காட்டு சிறுக்கி காட்டு சிறுக்கி யார் காட்டுசிறுக்கி" என்று ஒலிப்பது அனுராதா ஸ்ரீராமின் குரலா என்று ஒரு நிமிடம் வியந்துதான் போக வேண்டி இருக்கிறது. கீபோர்ட் நோட்ஸ் வெகு ஷார்ப். “காட்டுசிறுக்கிஇ நத்தைக்குட்டி” என வைரமுத்துவுக்கே உரிய துள்ளல் தமிழ் வர்ணனைகளும் இதில் உண்டு.
முதலில் கேடகும் போது ஆரம்ப குரல் யாரை வச்சு எடுத்திருப்பாங்கனு சந்தேகம்.."மாயமாய் போவாளோ" என்று சங்கர் மகாதேவன் கொஞ்சுவது அழகு. எலக்ட்ரானிக் ஆர்கன் கிராமத்து ஸ்டைலில் பயணிப்பது புதுசு. ரஹ்மானின் தேடல் அதிசய வைக்கிறது. இராவணின் பாடல்களில் துள்ளாட்டமான டூயட்டிற்கு இந்தப்பாடல் உத்திரவாதம் அளிக்கிறது.
http://www.mediafire.com/?zjey22y1dv0

கள்வரே : இனிப்புசுவை இல்லாமல் விருந்தா? மெலடி இல்லாத ரஹ்மானின் இசையா? இதோ அதற்கு விடை.. ஸ்ரேயா கோஷலின் குரலில் கஜல் இசையை வெகு இனிமையாய் படைத்திருக்கிறார் ரஹ்மான்."கள்வரேஇ கள்வரே கண் புகும் கள்வரே" என்று பைந்தமிழில் பரவசப்படுத்தி இருக்கிறார் வைரமுத்து.
ஒரு அழகான மாலைப்பொழுதில் ஜன்னலோரம் சாய்ந்தவாறு இயற்கையை ரசித்தபடியே பருகும் தேநீரைப்போல் பரவசமாய் இருக்கிறது இந்தப்பாடல். தலைவனை நோக்கிய தலைவியின் ஏக்கத்தை மிகச்சரியாக இந்தப்பாடல் தனக்குள் பதிவு செய்து இருக்கிறது.
"ஸ்ட்ரிங் இன்ஸ்ட்ரூமெண்டல்களை இத்தனை சுகமாக பயன்படுத்த முடியுமா? “வலி மிகும் இடங்கள்இ வலி மிகா இடங்கள் என தமிழுக்கு தெரிகிறதுஇ அது தங்களுக்கு தெரியுமா?” என்று ஒரு பெண் கேட்பது போல் எழுதி இருக்கும் வைரமுத்துவின் விரல்களுக்கு அழுத்தமாய் கொடுக்கலாம் ஒரு முத்தம்.
http://www.mediafire.com/?a0wnqi4tz0g

கடா கறி : “கடா கடா கறி அடுப்புல கிடக்கு” என்று பென்னிதயாள், பாக்யராய், A.R.ரஹைனா, தன்விஷா ஆகியோரது குரலில், குழு பாடலாக ஒலிக்கிறது. இந்தப்பாடல். டிபிக்கல் மலை வம்சத்தினர் பாடுவது போல ஹார்மோனிகா இசை வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
தங்கையையும் பாடவிட்டிருக்கிறார். இதில்.காடுகள் என்றால் மூங்கிலால் சூழப்பட்டிருப்பதுதானேஇ மூங்கில் இசைக்கருவிகளின் கோர்வையால் இசையின் பின்னணி பின்னப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு வரிகளில் இருக்கும் கேட்சிங் ட்யூன் அடுத்தடுத்த வரிகளில் இல்லாதது சற்று ஏமாற்றமே. ராவணன் ஆல்பத்தில் சுமாரான பாடல் இதுவாகத்தான் இருக்கும்.
http://www.mediafire.com/?mmg4tk20gjd

புதுப்புது சவுண்ட்ஸ்'க்காக் மெனக்கேட்டிருக்கிறார் ரஹ்மான். ஆனாலும் மணிரத்னத்தின்
படங்களில் மிக ஸ்பெஷலாக இருக்கும் ரஹ்மானின் இசைஇ இந்தப்படத்தின் பாடல்களில் ஸ்பெஷலாக மட்டுமே இருக்கிறது. ஒருவேளை கேட்க கேட்க கிறுக்கு பிடிக்க வைக்கலாமோ
என்னவோ?
உங்களுக்கு பிடிச்சிருக்கா?? கிறுக்கில்ல.. பாட்டு...

Saturday, May 8, 2010

என்ன கொடுமை சார் இது..ஏதே ஒரு அவசரத்துக்கு போன் கோல் எடுக்கிற என்ன மாதிரி ஆக்களுக்கு ஆப்பு வைக்கிறதுண்ணே கிழம்பியிருக்கிறாங்க போல பின்ன.- போனுக்குள்ளால உயர் அழுத்த ஒலியை ஏற்படுத்தி ஆக்கள கொல்லீனமாம். இந்த கதைய செல்வராகவனிட்ட சொல்லியிருந்தா இத வச்சு 'ஆயிரம் போன் வெடிக்க வச்ச ஒருவன்' படத்தை 10 வருசம் இயக்கியிருப்பார். இப்ப 2 நாளுக்கு முதல் 5 அல்லது 6 ம் திகதினு நினைக்கிறன். கலைஞர் ரீவியில 10.00 மணிக்கு போடுற விசாரணைனிற கிறைம் தொடரில கெட்போனுக்குள்ளால அதிக சத்தத்தில பாட்டு கேட்டு ஒருத்தன் சாகிறானாம். அத பாத்த ஒரு வெங்காயம் (திட்டுவதற்கு நாம் பயன்படுத்தும்  ஒரு சொல்) கெட்போனை செல்போனா மாத்தீட்டான். அத நம்பி எத்தின பேர் தங்கட போனை ஓவ் பண்ணினவயோ தெரியல??இனிமேல் இப்படி வாற வதந்திகளை நம்பவேணாமுங்கோ!!.

Sunday, May 2, 2010

எய்யாபியாட்லயாகுட்

ஐசுலாந்தில் உள்ள சிறு பனியாறுகளுள் ஒன்றாகும்.இதன் பனிக்கவிப்பு ஒரு எரிமலையை மூடியுள்ளது; இந்த எரிமலையின் உயரம் 1,666 மீ (5,466 அடி) ஆகும். இந்தப் பனியாறு 100 கி.மீ (39 ச.மைல்) பரப்பளவு கொண்டதாகும். மலையின் தெற்குமுனை முன்பு அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய கடற்கரையை அடுத்திருந்தது. ஆனால் கடல் 5 கி.மீ வரை உள்வாங்கியதால் முன்பு கடற்கரையிருந்த இடத்தில் பல அழகிய அருவிகளைக் கொண்ட மலைமுகடுகள் காணக்கிடைக்கின்றன.


27 மார்ச் 2010 ஆண்டின் எரிமலை சீற்றம்
எரிமலையின் மையத்தில் உள்ள பள்ளம் 3-4 கி.மீ விட்டமுள்ளது. இது 920, 1612,ம ற்றும் 1821-1823 ஆண்டுகளில் வெடித்துள்ளது. அண்மையில் 2010ஆம் ஆண்டு 20 மார்ச் மற்றும் 14 ஏப்ரல் நாட்களில் புகை கக்கியது.. மார்ச் வெடிப்பின்போது ஏறத்தாழ 500 உள்ளூர் மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஏப்ரல் வெடிப்பு இதனைவிட பல மடங்கு வலுவாக இருந்ததினால் வடக்கு ஐரோப்பாவில் பெருமளவில் வான்வழிப் போக்குவரத்தை பாதித்தது

மேலும் சில படங்கள்