Wednesday, November 2, 2011

ரா-வன் திரைவிமர்சனம்

ஆரம்பத்தில வேர்ச்சுவல் டிஸ்பிளே உருவம் பற்றிய பேச்சுடன் ஆரம்பமாகும் அதுக்கு பிறகு என்ன இது ரா-வண் பாக்கவந்தா இது என்ன நடக்குது எண்டுற மாதிரி செம போரா போகும். அப்ப வந்த முடிவுதாக் ஹிந்தி மொழிமாற்ற படம் பார்ப்பதில்லை என்ற தீர்மானம். ஆனால் படம் ஆரம்பித்து 15 நிமிடத்தின் பின் தான் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.
கதை இது தான்.

ஷாருக் கேம் உருவாக்கும் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவர்களின் புதிய செயற்திட்டத்துக்காக ஒரு கேம் உருவாக்கவேண்டும். ஷாருக்கின் மகனுக்கு ஹீரோவை விட வில்லன் மேலேயே விருப்பம். அதால் ஷாருக்கிடம் யாரும் வெல்ல முடியாத வில்லன் வேண்டுமென்கிறான். ஷாருக்கிற்கு அது பிடிக்காவிட்டாலும் அதை வெளிக்காட்டாமல் ரா-வண் எனும் யாரும் அழிக்கமுடியாத வில்லனையும் ஜீ-வண் எனும் ஹீரோவையும் உருவாக்கினான்.
கேம் வெளியிட்ட பின் ரா-வண் தன்னியக்கமாக தன்னை தானே புரோக்கிராம் செய்து கேம் உலகை விட்டு வெளியே வந்து இறுதியாக தன்னுடன் விளையாடிய ஷாருக்கின் மகனை அழிக்க புறப்படுகிறது. இடையே ரா-வண்ணால் ஷாருக் கொல்லப்படுகிறார். ரா-வண் தான் தந்தையை கொன்றதுஎன அறிந்த ஷாருக்கின் மகன் தந்தையின் லாப்க்கு சென்று ஆராயும் போது ஜீ-வண் பற்றி தெரிந்து ஜீ-வண்ணையும் இன்றைய உலகுக்கு கொண்டு வந்து அதன் மூலம் எப்படி ரா-வண்ணை அழிக்கிறான் என்பது தான் கதை.
படத்தில் புகை பிடிப்பதன் விளைவு பற்றி விளக்குவது சிறந்தது.

அயர்ன்மான் படத்தில் வருவது போல் HARD  என்பதை பொருத்தினாலே சக்தி பெறுவதையும் அது உடலுடன் இருக்கும் போது அழித்தாலே அழியும் என்ற லொஜிக்கும் நன்று.
எந்திரன் படத்தில் உள்ளது போன்று சீரியஸ் ஆன ரயில் காட்சியும் விறுவிறுப்பை அளிக்கின்றது.
இறுதி சண்டைக்காட்சி சூப்பர்.
தமிழுக்கு மாற்றும் போது தான் நகைச்சுவை காட்சிகள் சேர்க்கப்பட்டதா அல்லது உண்மையாகவே உள்ளதா என புரியவில்லை. நகைச்சுவைக்கும் பெருமளவு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஆஆஆ
முக்கியமான விசயம் நம்ம சூப்பர்ஸ்ரார் வரும் காட்சி...
யாரு நம்ம சூப்பர்ஸ்ரார்ல... 1 நிமிட காட்சி என்றாலும் தன்னுடைய ஸ்டைலில் ஜொலிக்கிறார். கார்ல வந்து எந்திரனில வாற வசனத்தை பேசுறார். கண்ணாடிய கழட்டி துடைச்சிட்டு போடுறார். அவ்வளவு தான்.

எப்படியாயினும் சிறந்த தீபாவளி விருந்து...

No comments:

Post a Comment