Friday, December 31, 2010

பிடிச்ச 6 படம் 2010

2010 ல் தமிழ் திரையுலகிற்கு அண்ணளவாக 150 படங்கள் வந்தன என்று கேள்விப்பட்டேன். அவற்றில் எனக்கு பிடித்த 6 படங்கள்:-
1.அங்காடித்தெரு
2.எந்திரன்
3.நந்தலாலா
4.மதராசப்பட்டினம்
5.பையா
6.மன்மதன் அம்பு

1.அங்காடித்தெரு
இப்போது இந்தியாவில் ரங்கநாதன் தெருவில் காணப்படும் உண்மை நிகழ்வை படம் பிடித்து காட்டும் யதார்த்த சினிமாவாக காணப்படுகின்றது. பிளாட்போர்ம் மக்களின் நிலை அப்பட்டமாக காட்டப்படுகின்றமை..!! புதுமுகநாயகன் மாதிரி தெரியாமல் தரமான நடிப்பு. அஞ்சலியின் நடிப்பு. என்ன சொல்வது. வசந்தபாலன் பெரிதும் பாராட்டப்படவேண்டியவர். ஐங்கரன் தயாரிப்பு நிறுவனம் இல்லாவிட்டால் அங்காடித்தெரு கிடைத்திருக்காது.
http://www.rajtamil.com/2010/03/watch-angadi-theru-movie-online.html

2.எந்திரன்
சன் பிக்சஸ் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் தமிழில் வந்த உலக தரமான படம். இவ்வளவும் காணும். சுஜாதாவின் கைவண்ணத்தில் வெளிவந்த மீண்டும் ஜீனோ என்ற நூலை ஓரளவு தழுவியதாக காணப்படுகின்றது. ( முடிவில் மியூசியத்தில் பாதுகாக்கப்படும் போது சிறு பிள்ளை ஏன் இப்படி ஆனது என கேட்ட போது "நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேன்" என்பது). இருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு புதிது. தரமானது.

http://tamilhindimovies.com/2010/10/watch-endhiran-movie-online/

3.நந்தலாலா
தாய்- மகன் இடையில் பாசபோராட்டம். மிஸ்கினின் அஞ்சாதே பாத்ததிலிருந்து இனி மிஸ்கினின் படம் பாக்கிற இல்லைனு இருந்தன். மாத்திப்புட்டான். பைத்தியகாரன் மாதிரியான மிஸ்கினின் நடிப்பு பாராட்டக்கூடியது. எங்க இருந்துதான் அந்த சின்ன பையனை எங்க இருந்து பிடிச்சார். ரொம்ப நல்லா நடிக்கிறானே. தாயை தேடிய பயணத்தில் மிஸ்கினும் பையனும் சந்திக்கும் கதாபாத்திரங்களின் நடிப்புக்கும் இவர்களின் நடிப்புக்கும் இணையில்லை.
இசை இளையராஜா. ராஜா தான் வயலின் இசை தரம். என்ன விருது கொடுக்கிறது.
http://www.rajtamil.com/2010/11/watch-nandalala-movie-online.html

4.மதராசப்பட்டினம்
தமிழகத்தின் வரலாற்றில் ஓரளவும் அக்காலத்தில் பிரிந்த காதலியின் தேடல் என வித்தியாசமான கதைக்களத்தில் நகர்கிறது. இசை உறுதுணையாக அமைந்தது. எல்லாவற்றிலும் தரமாக அமைந்து காணப்பட்டது.
http://www.tamiltwist.com/2010/07/watch-madrasapattinam-movie-online.html

5.பையா
முழு நீள பயணப்படமாக காணப்பட்டாலும் இளைஞர்களின் ரசனைக்கேற்ப லிங்குசாமி இயக்கியுள்ளார். இசையில் யுவன் நடிப்புக்கு கார்த்திஇ தமன்னா என தேர்வு செய்தது லிங்குசாமியின் திறமை.
http://tamilhindimovies.com/2010/04/watch-paiya-tamil-movie-online-free-pre-dvd/

6.மன்மதன் அம்பு
கமலின் கதை வசனத்தில் ரவிக்குமார் இயக்கத்தில் சிரிக்கிறதுக்கின்னே படம் எடுத்திருக்கிறாங்கள். பாடல்கள் பரவாயில்லை. இசை ஓகே. வசனம் சூப்பர். கமலின் கவிதை ரொக்ஸ். திரிஸாஇ மாதவன் காதல் - மாதவனுக்கு திரில சந்தேகம். உளவு பாக்க கமல்- கமலின்ர மனைவி விபத்தில சாக மாதவனும் திரியும் காரணம்- நண்பனுக்கு உதவ கமல் பொய்சொல்லி அந்த ஒரு பொய்க்கு 1000 பொய் சொல்லி ........எப்பிடி கமலால மட்டும் இப்பிடி முடியுது!!!
http://www.rajtamil.com/2010/12/watch-manmadhan-ambu-movie-online.html
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான வருடம் 2010. வானளாவிய சாதனைகளும், தாங்க முடியாத சோதனைகளுமாக பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஆண்டாகத் திகழ்ந்தது 2010.
நடிப்பு, இயக்கம், இசை, தயாரிப்பு, பாக்ஸ் ஆபீஸ் வசூல் என பல துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், விறுவிறுப்பான நிகழ்வுகளை அடுத்தடுத்துப் பார்க்கலாம்.
இந்த கோலிவுட் 2010 ப்ளாஷ்பேக்கை இசையுடன் துவங்கலாம்.  2010-ன் ஆகச் சிறந்த இசையைத் தந்தவர் எந்தக் கலைஞர்... இந்தப் பட்டியலில் இமான், ஜீவி பிரகாஷ் குமார், யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரஹ்மான், இளையராஜா என 5 முக்கிய கலைஞர்கள் போட்டி போடுகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா

2010 -ம் ஆண்டில் அதிக ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜாதான். பையா படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட். படத்தின் நாயகன் யுவன்தான் என மீடியா கொண்டாடியது.
அகில இந்திய அளவில் அதிக சிடிக்கள் விற்பனையான படங்களின் வரிசையில் பையா இடம்பிடித்ததென்றால், யுவன் இசையின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். இந்தப் படத்தில் இடம் பெற்ற 'துளித்துளி...' பாடல் இந்திய அளவில் டாப் 20 பாடல்கள் பட்டியலில் இடம்பெற்றது.
நான் மகான் அல்ல படத்திலும் பெரிதும் பேசப்பட்டது யுவனின் இசை.  2010-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க வெற்றிப் படமான பாஸ் என்கிற பாஸ்கரன் இசையும் பாடல்களும் இளைஞர்களை பெரிதும் கவர்ந்துவிட்டதையும் மறுக்க முடியாது.
கோவா, சர்வம், தில்லாலங்கடி, பாணா காத்தாடி போன்ற படங்கள் வர்த்தக ரீதியில் பேசப்படாவிட்டாலும் பாடல்கள் வெற்றி பெற்றன.   2010-ல் அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமையும் யுவனுக்கே உண்டு. மொத்தம் 15 படங்கள்!

ஜீவி பிரகாஷ்குமார்


 2010-ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க இசையைத் தந்த இன்னொரு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார். ஆரம்பத்தில் அவ்வளவாகப் பிடிபடாத இவருடைய இசை, அங்காடித் தெருவில் கவனம் ஈர்த்தது.
இந்தப் படத்தில் இன்னொரு இசையமைப்பாளரும் இருந்தார். அவர் விஜய் ஆண்டனி. அவள் அப்படியொன்றும் அழகில்லை.. பாடலை அவர்தான் கம்போஸ் செய்திருந்தார். எனவே படத்தின் இசை பெற்ற வெற்றியில் பாதிப் பங்கு அவருக்கே போனது.
அடுத்து ஜீவி பிரகாஷ்குமார் இசையில் வந்த மதராஸபட்டினம், அவரது திறமையை சரியாக வெளிப்படுத்தியது.  'வாம்மா துரையம்மா...' பாடலும், 'ஆருயிரே...', 'பூக்கள் பூக்கும்...' பாடல்களும் அட சொல்ல வைத்தன.
எம்எஸ் வி பாடிய 'மேகமே மேகமே..' உருக வைத்தது.

 இமான்
 

இவரது இசையில் வெளியான மைனா படப் பாடல்கள், அதற்கு முன் இவர் இசைத் துறையில் செய்த தவறுகளைக் கூட மன்னிக்க வைத்தது. குறிப்பாக மைனா மைனா நெஞ்சுக்குள்ள... மகா இனிமை.   இந்த புதிய இடத்தை அவர் எப்படி தக்க வைத்துக் கொள்வார் என்பதே இனி முக்கியம்.


ஏ ஆர் ரஹ்மான்:

விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணன் மற்றும் எந்திரன் ஆகிய மூன்று பெரிய படங்களின் இசை ரஹ்மான்தான். இவற்றில் விண்ணைத் தாண்டி வருவாயா இசைக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது என்றால் மிகையல்ல.
ஹோசனா..., மன்னிப்பாயா, ஓமனப் பெண்ணே... இதயத்தில் பச்சென்று ஒட்டிக் கொண்டன.  ராவணன் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. பெரிதாக சொல்லப்பட்ட 'உசுரே போகுதே...' பாடல் கூட செயற்கையாகவே இருந்தது.

ஆனால் ஆண்டின் இறுதியில் அவர் இசையில் வெளியான ரஜினியின் பம்பர் ஹிட் படமான எந்திரன் இந்திய சினிமாவின் அத்தனை சாதனைகளையும் உடைத்து நொறுக்கியது. குறிப்பாக இசைத் துறையில் இவ்வளவு பெரிய விற்பனை எப்படி சாத்தியம் என அனைவரும் வியந்து நி்ற்கிறார்கள்.
இதற்கு ரஹ்மான் இசையைத் தாண்டி, ரஜினி என்ற சாதனையாளரின் புகழும் காரணம் என்பதையும் மறுக்க முடியாது.   எந்திரனில் அத்தனைப் பாடல்களும் அட்டகாசமான விருந்து. குறிப்பாக, இரும்பிலே ஒரு இதயம் மற்றும் கிளிமாஞ்சாரோ கலக்கல் பாடல்கள். இரும்பிலே.. பாடல் ஆரம்பத்தில் சிலருக்கு அவ்வளவாக பிடிக்காமலிருந்தது.
ஆனால் படம் வெளியான பிறகு அந்தப் பாடல்தான் நம்பர் ஒன்னாக மாறியது இன்னொரு சுவாரஸ்யம்.

இளையராஜா:

இளையராஜா இசையில் இந்த ஆண்டில் வந்தவை மூன்று படங்கள்தான். அவற்றில் பழஸிராஜாவின் ஒரிஜினல் மலையாளப்படம்.
பின்னணி இசையில் தேசிய விருதைப் பெற்ற படம் அது. அதேநேரம், பாடல்களும் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றன. தமிழிலும் மிக இனிமையாக அமைந்தன பாடல்கள்.  நந்தலாலா பின்னணி் இசையின் உச்சமாகக் கருதப்படுகிறது.
படத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், எல்லோரும் ஏகமனதாகப் பாராட்டிய ஒரே அம்சம் இளையராஜாவின் இசைதான்.  இந்தப் படத்தில் ஜேசுதாஸ் குரலில் இடம்பெற்ற ஒண்ணுக் கொண்ணு துணையிருக்கு... பாடலும், இளையராஜா பாடிய 'தாலாட்டு கேட்க நானும்...', 'மெல்ல ஊர்ந்து...' பாடல்கள் மனசை உருக்கி விட்டன.


இவர்களைத் தவிர, வம்சம் மூலம் புதுமுக இசையமைப்பாளராக அறிமுகமான தாஜ் நூர் இசை குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தது. களவாணி படத்தில் எஸ் எஸ் குமரனின் 'டம்ம டம்மா..' பாடல் மறக்கமுடியாதது.



thanks- www.tamilcnn.com

2011 வித்தியாசமான ஆண்டு

இன்று பிறக்கும் 2011-ம் ஆண்டில், ஒரு தேதியை மாதம் மற்றும் வருடத்துடன் இணைத்து எழுதினால், அதில் ஒன்று என்ற இலக்கம் மட்டும் 6 முறை இடம் பெறுகிறது.  அதாவது, இந்த ஆண்டில் நவம்பர் மாதம் 11-ந் தேதியை, 11-11-11 என்று எழுதும்போது 6 முறை ஒன்று என்ற இலக்கம் இடம் பெறுவதை காணலாம்.  அதேபோல், இந்த ஆண்டில் 4 தேதிகளில் ஒன்று என்ற இலக்கம் மட்டுமே இடம் பெறுவது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
ஆண்டின் முதல் நாளே அந்த சிறப்பைப் பெற்று உள்ளது. அதாவது, 1-ம் தேதியான இன்று 1-1-11 ஆகும்.  அதேபோல் ஜனவரி 11-ந் தேதி, 11-1-11 என்றும், நவம்பர் 1-ந் தேதியன்று, 1-11-11 என்றும், நவம்பர் 11-ந் தேதி அன்று 11-11-11 என்றும், முற்றிலும் ஒன்று என்ற இலக்கமே இடம் பெறுவதைக் காணலாம்.
ஏற்கனவே கடந்த 1911-ல் வந்ததுபோல், 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 2011-ல்தான் இது போன்று அமைவதால், இந்த நூற்றாண்டின் வித்தியாசமான ஆண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.





Thanks to- www.tamilcnn.com

2011 புத்தாண்டு வாழ்த்துக்கள்