Saturday, September 17, 2011

வந்தான் வென்றான்

கண்ணனின் முன்னைய படங்களின் ஈர்ப்பு.., ஜீவாவின் கோ வினால் ஏற்பட்ட தாக்கம். இந்த படத்தில் ஓரளவு சொதப்பிவிட்டது...ஈரத்திற்கு பிறகு பலநாட்களாகவே சரியான வாய்ப்பு அமையாமல் இருந்த நந்தாவுக்கு நல்ல வாய்ப்பு. இரட்டை நாயகர்களாக ஜீவா, நந்தா நடித்து, வெளிவந்திருக்கும் படம். 

நந்தா - ஜீவாவிற்கு அப்பா வேறு என்றாலும் அம்மா முதல் கணவர் இறந்த பின் செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் பிறந்த பிள்ளை தான் ஜீவா. மற்றதகப்பனில் இருந்த கோபத்தால் ஒரு கட்டத்தில் தன் தம்பியை கிணற்றில் தூக்கிப் போட்டு (கொலை செய்து  விட்டதாக நினைத்து) மும்பைக்கு ஓடிப் போகிறார் நந்தா. சினிமா வழக்கப்படி மும்பை போய் பெரிய தாதாவாகவும் ஆகிறார்.
மும்பையை கலக்கும் தாதாவான நந்தாவிடம் ஒரு உதவி கேட்டு வருகின்றார் ஜீவா. தான் ஒரு பெண்ணை(டாப்ஸி) காதலிப்பதாகவும், அவள் தந்தையை ஒரு தாதா சுட்டு கொன்று விட்டதாகவும், அந்த தாதா பொலிஸில் சரணடைந்தால மட்டுமே அவள் தன்னை திருமணம் செய்வாள் என்றும் சொல்லி, இதற்கு நந்தா உதவ வேண்டும் என்று கேட்கிறார் ஜீவா. ஜீவாவின் காதல்கதையை கேட்ட நந்தாஇ யார் அந்த தாதா என்று கேட்க 'நீ தான்' என்கிறார் ஜீவா. பின்னர் வழக்கமான சண்டை, கொழுவல்களின் பின்  ஜீவா தன் தம்பி என்பதும் நந்தாவிற்கு தெரியவருகிறது. 


தம்பியின் காதலுக்காக தாதா தொழிலை விட்டொழித்து போலீஸில் சரணடைந்தாரா அல்லது தம்பி அண்ணனுக்காக காதலை விட்டொழித்தாரா, அதுதான் கதை!!!

கதைல இருக்கிற பிளஸ்....
ஜீவா
கோவிலிருந்து நல்ல நடிப்பை பார்க்க கூடியதாய் உள்ளது..ஆனால் பாக்ஸர் என்னதை நம்பும்படியாக இல்லை. காதலை பற்றி ஜீவா விபரிக்கும் காட்சி சூப்பர்.

பின்னணி இசை
தமனின் இசையில் காஞ்சன மாலா, முடிவில்லா போன்ற பாடல்கள் ரசிக்கும் ரகம். பின்னணியும் சூப்பர்.

ஒளிப்பதிவு
கேரள அழகை சிறப்பாக காட்டியுள்ளார். பாடல்களிலும் நேர்த்தி.

மைனஸ்

நடிகர் தேர்வு (ஓரளவு பறவாயில்லை)
நடிகர் தேரிவில ஓரளவு பிரச்சினை. தொடக்கத்திலயே நந்தாவின் அறிமுகத்தில் யாரோ (செட்டியாரோ என்னவோ) நந்தாவ நினைச்சு பயப்படுறமாதிரி..... அதில நடிப்பு சரியில்ல... நந்தா மும்பைல பெரிய தாதாவாம்... ஆனா இளைச்சு ஒட்டிப்போன நந்தா பொருந்தவில்லை

தபஸி
உடை அலங்காரம் பொருந்தவில்லை. குண்டு தான் என்றாலும் சில இடங்களில் மட்டும் ஓரளவு ஒல்லிபோல காட்டுவதாய் உடைஅலங்காரம் இருந்தது. பாடல்களில் குண்டு பூசணிதான். ஆடுகளம் போல்தான்.. ஓரளவு தான் நடிப்பு.

இந்தியிலயே கதைக்கிறது.
எல்லோரும் பெரும்பாலும் இந்தியிலேயே கதைத்தது புரியவில்லை. மொழிமாற்றத்திலும் சில இடத்தில் தமிழ் எழுத்துக்களும் பிழையாக காணப்பட்டது. இறுதி ட்விஸ்ட் நன்று. 

வந்தான் வென்றான்-- வந்துட்டு போய்ட்டான்.

No comments:

Post a Comment