Monday, September 5, 2011

மங்காத்தா...

தலயின் 50 வது படம். எப்படியாவது ஹிட் கொடுக்கவேண்டிய கட்டாயம். அதற்கேற்றவாறு வெங்கட்பிரபு சூப்பர் கதையுடன் விளையாடியுள்ளனர்.... தியேட்டரில் ரிக்கட் கிடைக்காத அளவு கூட்டத்தை கிளப்பியுள்ளது.  
சிம்பிள் ஸ்ரோறி. ஆனா செம இன்ரஸ்டா போகும். 

பொலிஸ் அதிகாரியான அஜித் பொலிஸ், ரவுடியால் கொல்லப்பட போகும் போது இன்ரோவாகி அவனை காப்பாத்துறார்.(அவன் கடத்தல் புள்ளி ஜெயப்ரகாஷுஸிடம்  வேலை செய்பவன்.). அஜித் சஸ்பெண்ட் ஆகி லீவ் ல இருக்கும் போது 4 பேர சந்திக்கிறார். (நம்ம ஜோக்கர் அங்கதான் வாறாரு..வேற யாரு??? ப்ரேம்ஜி தான்..)

அர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நிறுத்த நியமிக்கப்படும் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் ஆஃபீசர். கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்ரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்ரகாஷின் மகளான த்ரிஷாவும் அஜித்தும் லவ்வர்ஸ். அவங்களுக்கு ஒரு டூயட் சாங்கு...னு போய் கொண்டு இருக்கும். 

மும்பையின் செட்டியார்(ஜெயபிரகாஷ்) அவரின் ஒரே மகள் த்ரிஷா. ஐபிஎல் பைனல் மேட்ச்சில் 500 கோடி கறுப்பு பணம் செட்டியாருக்கூடாக கைமாறப்பட இருந்தது.
இது தெரிந்து அவரிடம் வேலை பார்க்கும் வேலையாள் , தாராவி எஸ். ஐ  ,தாராவியில் இருக்கும் பார் ஓனர் மகத் , அவருடைய நண்பர் ப்ரேம்(ப்ரேம்ஜி) எல்லோரும் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுறாங்க. ப்ரேமின்ர உளறு வாயால தல கிட்ட பணம் கடத்தல பற்றி சொல்லுறான். 
தலயும் இவங்களோட சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க பிளான் பண்ணுறார்.

கஸ்டப்பட்டு பணத்தை கொள்ளையிடுகிறது இந்த கேங்க். கேங்கிலே பணத்தை மொத்தமாக அடிக்க தல பிளான் போடுகின்றார். பணத்தை தேடி செட்டியார் கேங்க் அலைந்து ஆட்களை நெருங்கினால் பணம் அங்கு இல்லை அதை தனியா சுட்டு ப்ரேம்ஜி இ மகத்இ லட்சுமிராய் கம்பி நீட்டுகின்றனர்.

பணத்தையும் ஆட்களையும் தேடி இறுதி கட்ட துரத்தல்கள். சூதாட்டத்தை தடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைமை போலீஸ் அதிகாரியாக அர்ஜூன். அவரும் பணத்தையும் ஆட்களையும் பிடிக்க அலைகின்றார்.

இறுதியில் பணம் கைபற்ற பட்டதா? யார் கைபற்றினார்கள்? செட்டியார்?அர்ஜீன், ப்ரேம்ஜி கேங், தல ... யாருக்கு பணம்

முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல் தலைக்கு. அந்த நரை முடியிலும் ஹேண்ட்சம் ஆக இருக்கின்றார் தல. அர்ஜூன் இப்போதும் தான் ஒரு ஆக்சன் கிங் என்று நிரூபிக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதே வேகம். இளமை திரும்புகின்றது. குறைனு பாத்தா. ஏகப்பட்ட கெட்டவசனம். அரைகுறை உடுப்பு (எப்பவும் வெங்கட்பிரவின்ர படங்கள்ள இருக்கிறதுதானே..) 

தல போல வரமா???

No comments:

Post a Comment