கோ ஏற்படுத்திய பாதிப்பு கரு.பழனியப்பனுக்கு இப்போது தான் சதுரங்கத்தை வெளியிட தோன்றியுள்ளது.
ஆனால் 4 வருடத்துக்கு முன்பு திரைக்கதையில் காணப்பட்ட அம்சங்கள் இன்று பொருந்தவில்லை... ஆனாலும் பறவாயில்லை. ஆனால் நிச்சயம் 4 வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருந்தால் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.
சரி கதைக்கு வருவோம்.
திசைகள் பத்திரிக்கையின் பத்திரிக்கையாளர் ஸ்ரீகாந்த் பஸ்ஸிற்கு பணம் கொடுக்காத காரணத்தால் 15 நாள் சிறை வாசம் புரியும் போது சிறையில் பெறும் அனுபவத்தை, கொடுமையை திசைகளில் எழுதுகிறார். சிறையில் கஜேந்திரன் கதை சொல்பவராக வந்து ஜவ்வாக ஈஈஈய்க்கிறார்... ஆனாலும் போர் அடிக்கவில்லை. சிறைத்துறை அமைச்சர், சிறை அதிகாரி, இதர சில அதிகாரிகள் ஸ்ரீகாந்தின் சிறை அனுபவ கட்டுரையால் வேலை இழக்கின்றார்கள். அடுத்த கட்டம் காதல் தானே... சோனியாவுடன் காதல் காதலியை வேலை இழந்தவர்களில் யாரோ கடத்துவது போலவும் காட்சி வரவேண்டும் தானே....
காதலியை கண்டுபிடித்தாரா?? யார் கடத்தியது போன்ற சம்பவங்களுடன் சதுரங்கம் நடக்கிறது...
-------------------
கதையில் இடைவேளை வரை போர்... இடைவேளைக்கு பிறகு தான் ஆட்டம் சூடு பிடிக்கிறது.
காதலியை தேடும் இடங்களில் விறுவிறுப்பு.... ஸ்ரீகாந்தின் ஆட்டம் இப்படத்துடன் ஆரம்பித்திருக்கின்றது. அதிலும் பழனியப்பனின் புத்திசாலித்தனம் 'நண்பன்' படத்தில் ஸ்ரீகாந் நடக்க ஆரம்பித்த பின் வெளியிட்டிருப்பது படத்திற்கு மார்க்கெட்டை அளிக்கும் என்பது தான்....
சோனியாவிற்கு அவ்வளவாக நடிக்க வாய்ப்பில்லா விட்டாலும் சொதப்பவில்லை... ஆனால் எல்லோருக்கும் நல்ல பெயரை தரும்படியான படம்....
பாடல்கள் முன்பே வெளியிடப்பட்டு வெற்றி பெற்றவையே... வித்தியாசாகரின் இசை ரசிக்க கூடியதாக இருக்கிறது. முக்கியமாக 'என்னை தந்திடுவேன் நான் என்னை தந்திடுவேன்...', 'எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு...'
படத்திலேயே சிறந்த வசனம்---
'நல்லவன் ஜெயிப்பான் தம்பி என்ன ஜெயிப்போன்னு நம்பணும் அவ்வளவு தான்...'
படத்திற்கும் இதுவே பொருந்தும்....
'படம் ஜெயித்திருக்கும் தம்பி என்ன 4 வருசம் முந்தி வந்திருக்கணும் அவ்வளவு தான்...'




No comments:
Post a Comment